ஒரே தபால் நிலையத்தில் 40 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற தபால்காரர்

தென்காசியை அடுத்த மேலகரம் கிளை தபால் நிலையத்தில் தபால்காரர் ஆக பணியாற்றி வந்தவர் ஆறுமுகம். இவர் இதே தபால் நிலையத்தில் 40 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்து ஓய்வு பெற்றார். மேலகரம் குக் கிராமமாக இருந்த காலத்தில் பணியில் சேர்ந்த ஆறுமுகம் தனது தன்னலமற்ற சேவையால் மேலகரம் மக்களின் அபிமானத்தை பெற்றவராக இருந்து வந்தார். தனது பணி காலத்தில் எந்தவித புகாருக்கும் ஆளாகாமல் பணிபுரிந்ததால் உயர் அதிகாரிகளால் பாராட்டுப் பெற்றுள்ளார்.
நேற்று அவர் பணி ஓய்வு பெற்றார் இதையடுத்து அவருக்கு தபால் ஊழியர்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மேலகரம் அஞ்சலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு போஸ்ட் மாஸ்டர் முருகேசன் தலைமை வகித்தார். அஞ்சல் ஆய்வாளர் தசெல்வ பாரதி, மெயில் ஓவர்சியர் சரவணன், பழனி, நெல்லையப்பன் மற்றும் அஞ்சல் ஊழியர்கள் ஆறுமுகத்தின் சேவையை பாராட்டி பேசினர் நிகழ்ச்சியில் பொதுமக்கள், உறவினர்கள் கலந்து கொண்டு ஆறுமுகத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். முடிவில் ஓய்வு பெற்ற தபால் ஊழியர் ஆறுமுகம் பாராட்டுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.
Tags :