பிரபல மலையாள இயக்குநர் காலமானார்

by Staff / 24-09-2023 04:54:24pm
பிரபல மலையாள இயக்குநர் காலமானார்

மலையாள திரையுலகின் மூத்த இயக்குனர் கேஜி ஜார்ஜ் (77) இன்று காலமானார். இவர் கடந்த சில காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார். 1976இல் 'ஸ்வப்நதானம்' என்ற தனது முதல் படத்தினை இயக்கினார் ஜார்ஜ். இந்தப் படத்துக்கு சிறந்தப் படத்திற்கான கேரள மாநில அரசின் விருதும் இந்திய அரசின் தேசிய விருதும் கிடைத்தது. நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட மலையாள சினிமா பிரபலங்கள் கேஜி ஜார்ஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via