10 வகுப்புப் பொதுத்தேர்வு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

by Staff / 25-03-2024 12:06:59pm
10 வகுப்புப் பொதுத்தேர்வு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதிசெய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 8ஆம் வரை தேதி வரை நடைபெறுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo