துப்பாக்கியால் சுட்ட போலீஸ் அதிகாரி

by Staff / 20-10-2022 01:54:26pm
துப்பாக்கியால் சுட்ட போலீஸ் அதிகாரி

மொபைல் கடை ஒன்றில் தற்செயலாக போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்ட நிலையில், ஊழியர் படுகாயமடைந்தார். இதுதொடர்பான பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள மொபைல் கடையில் போலீஸ் அதிகாரி ஒருவர் கை தவறி தற்செயலாக துப்பாக்கியால் சுட்ட நிலையில், கடையில் வேலை செய்யும் இளைஞர் படுகாயமடைந்தார். குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருவதாக அமிர்தசரஸ் வடக்கு ஏசிபி வரீந்தர் சிங் தெரிவித்தார்.நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் குடும்பத்தினரின் வாக்குமூலத்தின்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காயமடைந்த நபரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வரீந்தர் சிங் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo