திருமண கோஷ்டி சென்ற படகுகள் கவிழ்ந்து கோர விபத்து

by Editor / 22-07-2022 12:28:47pm
திருமண கோஷ்டி சென்ற படகுகள் கவிழ்ந்து கோர விபத்து


பாகிஸ்தானில் 100க்கும் மேற்பட்டோர் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 50 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இரண்டு படகுகளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது அதிக பாரம் தாங்காமல் சிந்து நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தகவல் அறிந்து விரைந்து போலீசார் மீட்பு குழுவினர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்த நிலையில் 48 மணி நேரம் ஆகியும் மற்றவர்கள் கண்டுபிடிக்க இயலாததால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

 

Tags :

Share via

More stories