திமுக கிள்ளுகீரையல்ல அண்ணாமலைஅசலும், வட்டியும் கொடுத்து பார்க்கட்டும்- கி.வீரமணி

by Editor / 25-10-2021 04:16:08pm
திமுக கிள்ளுகீரையல்ல அண்ணாமலைஅசலும், வட்டியும் கொடுத்து பார்க்கட்டும்- கி.வீரமணி


தருமபுரி மாவட்ட திராவிட கழகம் சார்பில் நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன்? எதற்காக? கருத்தரங்கம் மற்றும் கற்போம் பெரியாரியம், ஆர்எஸ்எஸ் என்னும் ட்ரோஜன் குதிரை என்னும் நூல் அறிமுக விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நூல்களை அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது பேசிய அவர்,
நீட் தேர்வு அரசியல் சட்டத்திற்கு நேர் எதிரானது. நீட் தேர்வுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி வரும். நீட் தேர்வு நடத்த எதை நோக்கமாக சொன்னார்களோ, அந்த ஊழல் ஒழிக்கப்படவில்லை என்பது தெளிவாகிவிட்டது. நீட் தேர்வை ஒழிக்க அரசாங்கம் சட்ட ரீதியாக போராடிக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வு ஒரு நவீன குலக்கல்வி திட்டம். இதனால் ஒடுக்கப்பட்ட மக்கள் டாக்டராவது தடுக்கப்படுகிறது. ஆகவே நீட் தேர்வை ஒழிப்பதே இந்த பயணத்தின் நோக்கம் என கி.வீரமணி தெரிவித்தார்.


தொடர்ந்து பாஜக தலைவர் திமுகவுக்கு வட்டியும் முதலுமாக கொடுப்போம் என்ற கூறியதற்கு பதில் கொடுத்த கி.வீரமணி,
திமுக மீது பாஜக எதை செய்தாலும், முதலில் நான்கு இடம் மிஞ்சுமா என பார்க்கட்டும். தமிழகத்தில் நான்கு இடங்களில் பாஜக காலூன்றி வரவில்லை, மத்த கட்சிகளின் தோளூன்றி வந்துள்ளார்கள். பாஜக தலைவர் அண்ணாமலை நினைப்பது போல, திமுக கிள்ளு கீரை அல்ல. பிரதமர் மோடி நாட்டையே, வட்டி கடையில் அடமானம் வைத்து உள்ளார்.அதனால் தான் வட்டி, முதல் என பேசுகின்றனர். கடந்த 150 நாட்களில் எந்த முதல்வரும் செய்யாத சாதனையை தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்திருக்கிறார். மேலும் மாநிலத்தின் முதலமைச்சர் களுக்கெல்லாம் முதல்வராக அவர் இருக்கிறார்.


பாஜக தலைவர் அண்ணாமலை பாவம், கட்சியை பலப்படுத்த ஏதாவது பேசுனும்னு பேசுராறு. அவரை பார்த்து நான் பரிதாப படுகிறேன். திமுகவுக்கு அசலும், வட்டியும் கொடுக்கிறேன் என்று சொல்கிறார். வேண்டுமென்றால் கொடுத்து பார்க்கட்டும் என தெரிவித்தார்.

 

Tags :

Share via