இளைஞர்களை போதைப்பழக்கத்தில் இருந்து மீட்க காவலர்கள் கடமையுடன் பணியாற்ற வேண்டும்-புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவுரை

by Editor / 12-03-2024 09:00:18am
இளைஞர்களை போதைப்பழக்கத்தில் இருந்து மீட்க காவலர்கள் கடமையுடன் பணியாற்ற வேண்டும்-புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவுரை

புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப காவல் துறையை பலப்படுத்த வேண்டியது கட்டாயமாகியுள்ளது.சட்டம் ஒழுங்கு புதுச்சேரியில் சிறப்பாக உள்ளது. அமைதியான, அழகான மாநிலமாக புதுச்சேரி உள்ளது. அதற்காகத்தான் காவல் துறை பலப்படுத்தப்பட்டு வருகின்றது. அதனால் தான் சுற்றுலா பயணிகள் சாலைகளில் அச்சமின்றி நடக்கின்றார்கள் ,

குற்றங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இருப்பினும் இப்போது பேசப்படுவது போதைப்பொருட்கள் தான், சமுதாயத்தை சீரழிக்கக்கூடியதாகவுள்ளது. இளைஞர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகாமல் காவல் துறையினர் கண்காணிக்க வேண்டும்.

போதைப்பொருட்கள் வெளியில் இருந்து புதுச்சேரிக்கு வராமல் தடுக்கவும், பள்ளி ,கல்லூரிகளில் காவலர்கள் கண்காணிக்க வேண்டியது அவசியம், யாருக்கும் அச்சப்பட வேண்டாம் என காவல் துறையினர் பதவி உயர்வு வழங்கும் விழாவில் முதல்வர் ரங்கசாமி இவ்வாறு பேசினார்.

 

Tags : காவலர்கள் கடமையுடன் பணியாற்ற வேண்டும் முதல்வர் அறிவுரை

Share via

More stories

Logo