கர்நாடக காங்கிரஸ் கட்சி அமைச்சர் பதவி ராஜினாமா

by Admin / 06-06-2026 12:16:26am
 கர்நாடக காங்கிரஸ் கட்சி அமைச்சர்  பதவி ராஜினாமா

புதிதாக பதவியேற்ற கர்நாடக காங்கிரஸ் கட்சி முதலமைச்சர் டி. கே. சிவகுமார் தலைமையில் 13 அமைச்சர்கள் பதவியேற்றனர். எட்டு முறை எம்.எல்.ஏ வாக வென்ற மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவரான ராமலிங்க ரெட்டிக்கு நீர்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை ஏற்காத அவர் பெங்களூரு வளர்ச்சித் துறை தனக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், நீர்வளத்துறை வழங்கப்பட்டதால் தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார். தனக்கு பெங்களூர் வளர்ச்சி துறை தருவதாக வாக்களித்துவிட்டு முதலமைச்சர் டி கே சிவகுமார் ஏமாற்றி விட்டதாகவும் எனது மனசாட்சிக்கு எதிராக என்னால் செயல்பட முடியாது தொடர்ந்து நான் அவமதிக்கப்படுவதை தாங்கிக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலும் காங்கிரஸ் கட்சியிலே நீடிப்பேன் என்றும் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுவேன் என்றும் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அவருடைய ராஜனமா குறித்து முதலமைச்சர் டி கே சிவகுமார் ராமலிங்க ரெட்டி தமக்கு நெருங்கிய நண்பர் என்றும் அதிருப்தியை பேச்சுவார்த்தையின் மூலம் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளதோடு துறைகள் ஒதுக்கீடு என்பது காங்கிரஸ் மேல் இனத்தின் முடிவு என்றும் அவர் விளக்க வழித்து உள்ளார்.

 

Tags :

Share via
Logo