ரஷ்ய அதிபர்புதின் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை நிராகரித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளார்.
. உக்ரைன் போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள சூழலில், : செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மாநாட்டில்பேசிய விளாடிமிர் புதின், தற்போதைய சூழலில் உக்ரைனுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை என்று கூறினார்.
ஜெலென்ஸ்கி தனக்கு எழுதிய பகிரங்கக் கடிதம் சில இடங்களில் நாகரிகமற்ற முறையில் இருந்ததாகவும் உண்மையான எண்ணத்துடன் எழுதப்படவில்லை என்றும் புதின் விமர்சித்தார்
.உக்ரைன் தரப்பு தங்களுக்கு சாதகமாக ரஷ்யப் படைகளின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக மட்டுமே இந்த பேச்சுவார்த்தையை விரும்புவதாகவும், ரஷ்யாவின் இலக்குகள் முழுமையாக எட்டப்படும் வரை இராணுவ நடவடிக்கை தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார்.
அமெரிக்கா தற்போது ஈரான் போரில் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதால், வாஷிங்டனின் தலையீட்டிற்காகக் காத்திருக்காமல் இரு நாடுகளும் நேரடியாகப் பேசி போரை முடிக்க வேண்டும் என ஜெலென்ஸ்கி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
சமீபத்திய மாதங்களில் உக்ரைன் இராணுவம் இழந்த சில பகுதிகளை மீட்டெடுத்துள்ளதுடன், ரஷ்யாவின் எல்லைக்குள் 1,000 கி.மீ தூரம் வரை ஊடுருவி அதன் எரிபொருள் உள்கட்டமைப்புகள் மற்றும் கடற்படை தளங்கள் மீது தொடர் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி நெருக்கடி கொடுத்து வருகிறது.
பேச்சுவார்த்தைக்கான அழைப்பை புதின் நிராகரித்ததன் மூலம், ரஷ்யா மீண்டும் அமைதியை விடுத்து போரையே தேர்ந்தெடுத்துள்ளது என்று ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார் .
வார இறுதியில் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஜெலென்ஸ்கியை நேரில் சந்தித்து அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தைக்கான வழிகள் குறித்து ஆலோசிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
உக்ரைனுக்கு நேரடியாக ஆயுத உதவிகளை வழங்கும் ஐரோப்பிய நாடுகளால் நடுநிலையான மத்தியஸ்தர்களாகச் செயல்பட முடியாது என்று கூறி, அவர்களது தலையீட்டை புதின் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
கடந்த ஆண்டு அலாஸ்காவின் ஆங்கரேஜில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் புதின் இடையே எட்டப்பட்ட சமரச உடன்பாடுகளின் அடிப்படையில் மட்டுமே பேச்சுவார்த்தை சாத்தியம் என ரஷ்யா கூறுகிறது; ஆனால் உக்ரைன் தனது பகுதிகளை ரஷ்யாவிற்கு விட்டுக் கொடுக்க மறுத்து இந்த உடன்பாட்டை ஏற்கனவே நிராகரித்துள்ளது.
Tags :


















