ஜி.எஸ்.டி வசூல் ₹16.5 லட்சம் கோடி எட்டியுள்ளது.- மத்திய நிதியமைச்சகம் தகவல் ,
கடந்த ஆண்டை விட ஜி.எஸ்.டி அதிக வரி வசூலானதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் ,
2025 டிசம்பர் மாதத்தில் மொத்த ஜி.எஸ்.டி வரி வசூல் ₹1.75 லட்சம் கோடி ஆகும். இது 2024 டிசம்பர் மாத வசூலான ₹1.64 லட்சம் கோடியை விட 6.1% அதிகம்.நடப்பு 2025-26 நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் (ஏப்ரல் முதல் டிசம்பர் வரை), மொத்த ஜிஎஸ்டி வசூல் ₹16.5 லட்சம் கோடி எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தை விட 8.6% வளர்ச்சி ஆகும். இந்த மாதத்தில் ₹2.01 டிரில்லியன் வசூலாகி, 2024 மே மாதத்தை விட 16.5% வளர்ச்சியைப் பதிவு செய்தது. ₹1,95,936 கோடி வசூலாகி, முந்தைய ஆண்டை விட 4.6% அதிகரித்தது.
புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்குப் பிறகு, செப்டம்பர் மாதத்தில் ₹1.89 லட்சம் கோடி என்ற சாதனை அளவை எட்டியது.இறக்குமதி வரி வருவாய் 19.7% அதிகரித்ததும், செப்டம்பர் 2025-ல் கொண்டு வரப்பட்ட வரி விகித மாற்றங்களும் இந்த உயர்வுக்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.
Tags :



















