மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவர்
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நபர், தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறின்போது, மனைவியின் மூக்கை கடித்துத் துப்பிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். கணவர் விஜய்யின் பெயரை ஜாமீன்தாரராக வைத்து மனைவி கடன் வாங்கியுள்ளார். அதற்கான தவணை பணத்தை மனைவி கட்டாமல் இருந்துவந்துள்ளார். பல தவணைகள் நிலுவையில் இருந்ததால், இதுகுறித்து கணவர் விஜய்யிடம் கடன் கொடுத்தவர்கள் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால், தம்பதி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், மனைவியின் மூக்கை விஜய் கடித்ததாக கூறப்படுகிறது.
Tags :



















