சின்ன சின்ன செய்திகளின் தொகுப்பு

by Editor / 14-01-2022 03:03:49pm
சின்ன சின்ன செய்திகளின் தொகுப்பு

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு  சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகைக்கு தடையால் வெறிச்சோடியது.

சென்னை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை வீட்டின் முன்பு பைக்கில் சென்ற மூதாட்டி மயக்கமடைந்து சாலையில் விழுந்தார். ஆளுநர் உடனடியாக ஆம்புலன்சை அழைத்து முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றினார்.


நெல்லை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டது.

 தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார்ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு புத்தாடை வழங்கி, சமத்துவ பொங்கல் கொண்டாடினார்.


கோவை பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகை கோலாகலம். தனியார்க்கு சொந்தமான கோவில்களில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.


சிவகங்கை பிள்ளையார்பட்டியில் கற்பகவிநாயகர்க்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அனுமதியில்லாததால் வெறிச்சோடியது


திருச்சி பொங்கல் பண்டிகை வழக்கமான உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது. கோவில்கள், சுற்றுலாதளங்கள் அடைப்பால் ஏமாற்றம்.


கன்னியாகுமரி கோவில், சுற்றுதலம் மூடப்பட்டதால் கடற்கரை வெறிச்சோடியது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகள் மற்றும் பிரசித்திபெற்ற ஆலயங்கள் மூடப்பட்டன.
 

 

Tags :

Share via

More stories