மருத்துவமனையில் மின்வெட்டால் பறிப்போன உயிர்

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை குத்தாலம் பகுதியை சேர்ந்த அமராவதி என்ற பெண் நுரையீரல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். நுரையீரல் பிரச்சனை என்பதாலும் மூச்சு திணறல் ஏற்படும் என்பதாலும் இவருக்கு வென்டிலேட்டர் மூலமாக சுவாசம் செலுத்தப்பட்டு வந்தது. இதனிடையே நேற்று மதியம் திடீரென அரை மணி நேரத்திற்கு மேலாக மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் மின்சாரம் தடைபட்டது. இதனால் அமராவதிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வென்டிலேட்டர் இயங்காமல் அவர் மரணம் அடைந்தார். இது குறித்து மருத்துவரிடம் கேட்டபோது நாங்கள் என்ன செய்வது, மருத்துவமனை நிர்வாகத்திடம் கேளுங்கள் என அலட்சியமாக பதிலளித்துள்ளார்.
Tags :