தெலங்கானாவில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு

by Staff / 28-11-2023 12:08:57pm
தெலங்கானாவில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு

தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சியும், ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ், பாஜகவும் தீவிரம் காட்டி வருகின்றன. வரும் 30ஆம் தேதி ஒரே கட்டமாக 119 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 3ஆம் தேதி நடக்கிறது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் பரப்புரை மேற்கொண்டிருந்தனர்.

 

Tags :

Share via