7 வயது சிறுமி பலாத்காரம்.. தாய்க்கு சிறை

by Staff / 28-11-2023 12:07:10pm
7 வயது சிறுமி பலாத்காரம்.. தாய்க்கு சிறை

கேரளாவின் திருவனந்தபுரம் விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.ரேகா, சம்பந்தப்பட்ட சிறுமியின் தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.20,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்ட பெண் தனது கணவரை விட்டுவிட்டு 2018-19-க்கு இடையில் தனது காதலலான சிசுபாலனுடன் சேர்ந்து வாழ்ந்தார். அப்போது சிறுமியை சிசுபாலன் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்தரங்க உறுப்புகளில் காயமடைந்த சிறுமி, தனது தாயிடம் கூறிய போதிலும், அதை யாரிடமும் சொல்லக்கூடாது என தாய் மிரட்டி வந்துள்ளார்.

 

Tags :

Share via