ஆன்லைன் மோசடி காணாமல் போன ரூ.44 ஆயிரம்
ஆன்லைன் மோசடி சமீப காலமாக, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எப்படியாவது திருடி விட வேண்டுமென மோசடி கும்பல் சுற்றி வருகிறது. அந்தவகையில் சென்னையை சேர்ந்த ஒருவருக்கு வங்கி கணக்கு காலாவதியாகிவிட்டதாக மெசேஜ் வந்துள்ளது. அதை நம்பி, அந்த நபர், லிங்கை க்ளிக் செய்து தனது விவரங்களை பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவரது கணக்கில் இருந்து ரூ.44,000 எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் காவலர்கள் இதுபோன்ற லிங்குகளை க்ளிக் செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் செல்போன் பயனாளர்களிடம் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :


















