உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக இன்று ஆலோசனை
தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில், வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள், நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, இன்று முதல் உள்ளாட்சித் தேர்தல் குறித்து, 9 மாவட்டச் செயலாளர்களுடன் அதிமுக தலைமை ஆலோசனை நடத்த உள்ளது. அதன்படி, இன்று வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.ஆகஸ்ட் 5 ஆம் தேதி நெல்லை , தென்காசி , ஆகஸ்ட் 6 ஆம் தேதி காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர்களுடனும் , ஆகஸ்ட் 7 ஆம் தேதி விழுப்புரம் , கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர்களுடனும் ஆலோசனை நடைபெறவுள்ளது
Tags :