தமிழ்நாட்டில் தொடங்கியது ரமலான் நோன்பு.

தமிழ்நாட்டில் நேற்று பிறை தென்பட்டதால் ரமலான் நோன்பு இன்று தொடங்குவதாக தலைமை காஜி சலாஹூதீன் முகமது அயூப் கூறினார். ரமலான் மாத நோன்பு துவங்குவதற்கான பிறை தெரிந்த நிலையில், இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பு தொழுகையை இஸ்லாமியர்கள் வீட்டிலேயே நடத்தினர். தற்போது கொரோனா தொற்று குறைந்து கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டதால், மகிழ்ச்சியுடன் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

Tags : தமிழ்நாட்டில் தொடங்கியது ரமலான் நோன்பு.