பேகசுஸ் பிரச்சனை- விசாரணைக்கு உத்தரவிட எடிட்டர்ஸ் கோரிக்கை

by Editor / 04-08-2021 09:55:45am
பேகசுஸ் பிரச்சனை- விசாரணைக்கு உத்தரவிட எடிட்டர்ஸ் கோரிக்கை

இஸ்ரேல் நிறுவனம் உருவாக்கிய மொபைல் உளவு நிறுவனம் இந்தியாவில் உளவு ஏஜென்சிகளால் பயன்படுத்தப்பட்டது மத்திய அரசுக்கு என்ன பங்கு உள்ளது என்பதை சிறப்பு விசாரணை குழு ஒன்றை நிறுவி அதன் மூலம் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் இந்திய எடிட்டர்ஸ் கில்டு செவ்வாயன்று மனு தாக்கல் செய்துள்ளது.

அரசின் உயர்நிலை அமைப்புக்கள் பத்திரிக்கையாளர்களை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உளவு பார்ப்பதன் மூலம் பேச்சு சுதந்திரம் பறிக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் இதயத்தில் விஷம் பாய்ச்சப்படுகிறது.

பத்திரிக்கை சுதந்திரம் என்பது மிகவும் போராடி பெற்ற உரிமையாகும் இந்த உரிமை ஜனநாயகம் நிலைபெற அவசியத் தேவையாகும் என்று தனது மனுவில் எடிட்டர்ஸ் கில்ட் கூறியுள்ளது.

அரசும் அதன் ஏஜென்சி செய்தியாளர்களின் பணியில் குறுக்கிடாமல் இருப்பது அவசியம்.

செய்தியாளர்கள் செய்திகளுக்கு அடிப்படையாக உள்ளவர்களிடம் குறுக்கீடு இல்லாமல் தொடர்பு கொள்வது அவசியமாகும் இதன் மூலம்தான் அரசுப்பணிகளில் இடம்பெறும் ஊழல்களை கண்டறிவதும் எதிர்க்கட்சியினர் உடன் தொடர்பு கொள்வதும் சாத்தியமாகும் பத்திரிகை ஆசிரியர்களின் சங்கம் தனது மனுவில் தெளிவுபடுத்தியுள்ளது.

ஏற்கனவே பேகசுஸ் பிரச்சனை குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் விசாரணையை மேற்பார்வையிட வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் எம்எல் சர்மா மற்றும் மாநிலங்களவை மார்க்சிஸ்ட் உறுப்பினர் ஜான் பிரிட்டோ மற்றும் மூத்த பத்திரிக்கையாளர்கள் என்.ராம், சசிகுமார் ஆகியோர் மனு செய்துள்ளனர் இந்த மனுக்கள் அனைத்தும் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via