தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.

தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.450 கோடி மதிப்பில் கட்டப்பட்டபுதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்."தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை.தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.தமிழ்நாட்டுக்கு ஏராளமான ரயில் திட்டங்களை ஒன்றிய அரசு அளித்துள்ளது.ரயில்வே திட்டங்களால் தமிழ்நாட்டின் வளர்ச்சி வேகமெடுக்கிறது.தமிழ்நாட்டிற்கு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.11 மருத்துவக் கல்லூரிகளை தமிழ்நாட்டுக்கு கொடுத்துள்ளோம்."

Tags : தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.