மருதமலையில் 184 அடி முருகன் சிலைக்கு எதிர்ப்பு - உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
கோவை: மருதமலையில் 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் பணிகளை நிறுத்த கோரி வனவிலங்கு ஆர்வலர் முரளிதரன் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் வனத்துறைக்கு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. நீலகிரி வனப்பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்லும் யானைகள், இந்த வழித்தடத்தை இயற்கை பாதையாக பயன்படுத்துகின்றன என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சிலை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :



















