திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோத  மதுபான விற்பனை  40 பேர் கைது.

by Editor / 25-03-2023 11:21:07pm
திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோத  மதுபான விற்பனை  40 பேர் கைது.

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து 19.03.2023 -ம் தேதி முதல் 24.03.2023 -ம் தேதி வரை  சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 40 நபர்களை TNP Act - ன் கீழ் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 314 பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo