சுங்கச்சாவடிகளை குறைக்க நடவடிக்கை -அமைச்சர் தகவல்.

தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார். சுங்கச்சாவடிகளைக் குறைக்க வேண்டுமென பாமகவின் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் வைத்த கோரிக்கைக்கு பதிலளித்த எ.வ.வேலு, "தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளை குறைப்பதற்கான நடவடிக்கையை நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டு வருகிறது. மாமல்லபுரம் சாலையில் உள்ள 4 சுங்கச்சாவடிகளை ஏற்கெனவே தமிழ்நாடு அரசு அகற்றியுள்ளது" என கூறியுள்ளார்.
Tags : சுங்கச்சாவடிகளை குறைக்க நடவடிக்கை -அமைச்சர் தகவல்.