தொடர் விடுமுறை என்பதால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்.
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான குற்றாலம் வனப்பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக குற்றாலம் பேரருவி,ஐந்தருவி, உள்ளிட்ட அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக அனைத்து அருவி களிலும் நீர்வரத்து அதிகரித்து உள்ளதை தொடர்ந்து தொடர் விடுமுறை தினம் என்பதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அதிகாலை முதல் குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். மேலும் குற்றாலம் பேரருவிப் பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது . மேலும் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Tags : குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்.