ஆரியன் கான் வழக்கில் அதிகாரிகள்25 கோடி லஞ்சம் கேட்டதாக தகவல்

by Editor / 24-10-2021 08:47:16pm
ஆரியன் கான் வழக்கில் அதிகாரிகள்25 கோடி லஞ்சம் கேட்டதாக தகவல்

கடந்த அக்டோபர் மாதம் 3ந் தேதி மும்பையிலிருந்து கோவாவுக்கு சென்று கொண்டிருந்த சொகுசு சுற்றுலா கப்பலில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.

சோதனைக்குப் பின் கப்பலில் கோவா சென்று கொண்டிருந்த பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் அவருடைய நண்பர்களும் கைது செய்யப்பட்டனர் அவர்கள் மீது போதைப் பொருள் வைத்திருந்ததாகவும் போதை பொருள் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

கைது செய்யப்பட்ட அனைவரும் மும்பை ஆர்தர் சிறைச்சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் சுயேட்சையான சாட்சியமாக பிரபாகர் செயில் என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர் ஞாயிறன்று மும்பை நகரில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்பொழுது அவர் கூறிய தகவல் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 3ம் தேதி  கோவா சென்ற கப்பலில் ஆர்யன் கானுடன் சுயேட்சையான சாட்சிகள் கோசாவியும் பிரபாகர் செயிலும் கப்பலிலிருந்து நேரடியாக போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அங்கு போதைப் பொருள் கட்டுப்பாட்டு அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரியான டிசோசாவிடம் கோசாவி தொலைபேசியில் பேசியுள்ளார்.

அப்போது இந்த போதைப்பொருள் வழக்கில் இருந்து என்னை விடுவிக்க 25 கோடி தரப்படவேண்டும் என்று போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு உயர் அதிகாரி கூறப்பட்டுள்ளது.பின்னர் பேரம் பேசியதில் அந்தத் தொகை ரூ.18 கோடி ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ரூ. 18 கோடியில் 8 கோடி என்சிபி பிராந்திய இயக்குனர் சமீர் வான்கெட்டேவுக்கு தரப்பட வேண்டும் என டிசோசா கூறியதாக பிரபாகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த செய்தியை உடனே போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு அதன் பிராந்திய இயக்குனர் சமீரும் மறுத்தனர்.

 

Tags :

Share via