திமுகவில் சேர்ந்தார் இணைந்தார்.அதிமுக வக்கீல்

by Editor / 24-10-2021 08:45:06pm
திமுகவில் சேர்ந்தார் இணைந்தார்.அதிமுக வக்கீல்

அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசு வழக்கறிஞராக இருந்தவர் எம்எல் ஜெகன். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஒபிஎஸ் அணியில் இணைந்தார்.

இரு அணிகளும் இணைந்தபோது அமமுகவில் சேர்ந்து அக்கட்சியின் வழக்கறிஞர் அணி இணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்த ஜெகன் திடீரென இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து அவரது முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

ஜெகனுடன் அதிமுக மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் டாக்டர் புகழேந்தி, மகளிர் அணி பிரமுகர் பரிமளா உள்ளிட்ட ஏராளமானவர்கள் திமுகவில் இணந்தனர்.

இது குறித்து ஜெகன் கூறுகையில்,

அதிமுகவுக்கும் அமமுகவுக்கும் எதிர்காலம் இல்லை. எனவே அங்கே இருப்பதில் எந்த நியாயமும் இல்லை. பல பிரச்னைகளில் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓபிஎஸ்ஸே திமுக ஆட்சியைப் பாராட்டுகிறார். அதிமுகவைவிட திமுக சிறந்த கட்சி, தமிழகத்தில் தலை சிறந்த ஆட்சியை தளபதி ஸ்டாலின் நடத்தி வருகிறார். எனவே மக்கள் சேவையை தொடர திராவிட இயக்கத்தின் தாய் இயக்கமான திமுகவில் இணைந்தேன் என்றார்.

எம்எல் ஜெகன் அரசு வழக்கறிஞராக இருந்த போது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் கருணாநிதி மீது 15 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. அதில் ஒரு வழக்கு தொடர்பாக கருணாநிதி நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, அரசு வழக்கறிஞராக இருந்த ஜெகன் கருணாநிதிக்கு வணக்கம் தெரிவித்தார். கருணாநிதியும் பதிலுக்கு வணக்கம் கூறினார்.

இது பற்றி கூறிய ஜெகன்

அன்று கலைஞர் எனக்கு வணக்கம் கூறவில்லை ஆசி வழங்கினார் என்றே கருதுகிறேன் என்றார்

 

Tags :

Share via