பிலிப்பைன்ஸ்: 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இருவர் பலி, பலர் படுகாயம்

பிலிப்பைன்ஸ் தீவான லூசானில் இன்று புதன்கிழமை அதிகாலை 7.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.தலைநகர் மணிலா உள்ளிட்ட பல பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கங்கள் உணரப்பட்டன. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் இதுவரை இரண்டு பேர் இறந்துள்ளனர் மற்றும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளனநில அதிர்வின் மையம் அப்ரா மாகாணத்தில் உள்ள டோலோரஸ் நகரத்திலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 11 கி.மீ.தொலைவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags :