பாம்பன் -ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (30.6.2021) இரவு 11.55 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 05119 ராமேஸ்வரம் - மாண்டுயாடிஹ் சிறப்பு ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து நாளை (01.7.2021) இரவு 07.25 மணிக்கு புறப்படும். இன்று இரவு சென்னையில் இருந்து புறப்படும் வண்டி எண் 02205 & 06851 சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்கள் மண்டபம் வரை மட்டும் இயக்கப்படும். மேலும் நாளை (01.7.2021) பகல் நேரத்தில் இயக்கப்படும் வண்டி எண் 06849/06850 திருச்சி-ராமேஸ்வரம் - திருச்சி சிறப்பு ரயில்களும் மண்டபம் வரை மட்டும் இயக்கப்படும்.
நாளை (01.7.2021) மாலை 05.10 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06852 ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயிலும் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் ரயில் நிலையங்களில் சிறப்பு பேருந்துகள் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tags :