முதியோர் காப்பகம் - பெண்கள் விடுதிகளை பதிவு செய்ய வேண்டுகோள்

by Admin / 13-08-2021 03:40:52pm
முதியோர் காப்பகம் - பெண்கள் விடுதிகளை பதிவு செய்ய வேண்டுகோள்

திருப்பூர்-மாவட்டத்தில் இயங்கும் முதியோர் காப்பகம் மற்றும் பெண்கள் விடுதிகள் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழக அரசின் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் - 2007ன் படி முதியோர் இல்லங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். அதேபோல் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகளும் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியம்.

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் இயங்கும் பெண்கள் விடுதிகள், முதியோர் காப்பகங்கள் சமூகநலத்துறை அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இயங்கி வரும் விடுதிகளும், காப்பகங்களும் தாங்களாக முன்வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மற்றும் பெண்கள் விடுதிகள் இயங்குவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்களை பெற்று முறையாக பதிவு செய்துகொள்ள வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு  உள்ளது

 

Tags :

Share via

More stories

Logo