வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு.

by Editor / 24-05-2024 11:36:50pm
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு.

பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று(மே 24) ஏற்றப்பட்டது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் இன்று காலை 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், மீனவர்களுக்கு தொலைதூர புயல் முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன் பகுதி நாட்டுப் படகு மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு

Share via

More stories