கூகுள் மீட்’ மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள்

by Admin / 13-08-2021 03:47:07pm
கூகுள் மீட்’ மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள்

10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘வாட்ஸ் ஆப்’ குழு தொடங்கப்பட்டு அதில் ஆசிரியர்கள் கற்பிக்கும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

உடுமலை கல்வி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ‘ஆன்லைன்’ வாயிலாக பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அதில் ஒன்று முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வித்தொலைக்காட்சி மற்றும் ‘யூ டியூப்’ சேனலில் பாடங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

அதேநேரம் 10, 11 மற்றும்  12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘வாட்ஸ் ஆப்’ குழு தொடங்கப்பட்டு அதில் ஆசிரியர்கள் கற்பிக்கும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது. சில பள்ளிகளில் பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் ஜூம், கூகுள் மீட் உள்ளிட்ட இணையதளங்கள் வழியே ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
 
இந்நிலையில் குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை ‘கூகுள் மீட்’ இணையதளத்தை பயன்படுத்தி பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தலைமையாசிரியர் பழனிசாமி கூறியதாவது:

தற்போது அனைத்து வகுப்பு ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிகின்றனர். இதனால் கூகுள் மீட் பயன்படுத்தி ஆன்லைன் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரை ஒரு பாட வேளையை 30 முதல் 45 நிமிடங்களாக நிர்ணயித்து அட்டவணை தயாரிக்கப்படுகிறது. அதில் 9-ம் வகுப்பு வரை ஒரு நாளில் ஒரு பாட வேளை மட்டுமே நடத்தப்படுகிறது.

அதேநேரம் 10 முதல் 12-ம் வகுப்பு வரை வழக்கமான நேரடி வகுப்புகளை போல் காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை அனைத்து பாடங்களும் நடத்தப்படுகின்றன. இதில் 60 முதல் 70 சதவீதம் மாணவர்களின் வருகை உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கூறினார்.

 

Tags :

Share via