கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

by Staff / 03-06-2023 02:00:19pm
கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100வது பிறந்தநாளையொட்டி, சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதே போல், பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

 

Tags :

Share via

More stories