காரை வாடகைக்கு எடுத்து விற்ற பெண் கைது

by Staff / 29-03-2023 01:03:15pm
காரை வாடகைக்கு எடுத்து விற்ற பெண் கைது

கேரளாவின் திருச்சூரில் கொள்ளை மற்றும் மோசடி வழக்குகளில் குற்றவாளியான சினி என்பவரை ஒல்லூர் போலீசார் கைது செய்தனர். கேசவ்பாடியைச் சேர்ந்த ஜித் என்பவரிடம் இருந்து காரை வாடகைக்கு எடுத்து, பின்னர் அந்த வாகனத்தை வேறு ஒருவருக்கு விற்ற வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். ஒல்லூர் ஸ்டேஷன் உள்பட, சினியின் பெயரில் ஒல்லூர், புதுக்காடு, மாலா, டவுன் ஈஸ்ட் ஸ்டேஷன்களில் இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. வாடகை வீட்டை அடிக்கடி மாற்றி, அப்பகுதியில் வசிப்பவர்களிடம் பணம், தங்கத்தை கொள்ளையடிப்பது இவரின் வாடிக்கை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo