மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் திடீர் அனுமதி.

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சளி, காய்ச்சல், இருமல் காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : மதிமுக பொதுச்செயலாளர்