இளைஞர் அடித்துக்கொலை - பெண் கைது

by Staff / 06-12-2022 12:23:20pm
இளைஞர் அடித்துக்கொலை - பெண் கைது

கேரளாவின் காசர்கோடு - திருக்கரிப்பூர் மேட்டம்மாள் வயலோடி பகுதியில், இளைஞரை கொன்றுவிட்டு, சடலத்தை வீட்டின் அருகே வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணன் மகன் பிரியேஷ் (32) வீட்டின் அருகே சடலமாக கிடந்தார். இந்தக் கொலைக்குப் பின்னணியில் 7 பேர் இருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.சந்தேரா போலீசார் ஒரு பெண்ணை விசாரணைக்காக காவலில் எடுத்தனர். இந்த பெண்ணின் போனில் இருந்து இரவு நேரத்தில் பிரியேஷுக்கு அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த கும்பல் அந்த இளைஞரை அழைத்து வந்து அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. முன்னதாக கொலை செய்யப்பட்ட இளைஞரை மர்ம கும்பல் மிரட்டியதாகவும் விசாரணையில் தெரியவந்தது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories