வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச் சரிவு பலிகள்-அதிமுக 1 கோடிரூபாய் நிவாரணம்.
வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச் சரிவு பலிகள்-அதிமுக 1 கோடிரூபாய் நிவாரணம்.
கேரள மாநிலம், வயநாடு பகுதியில் ஏற்பட்ட கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச் சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததற்கிணங்க (6.8.2024 செவ்வாய் கிழமை) கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், கேரள மாநில மின்துறை அமைச்சர் K. கிருஷ்ணன்குட்டி ஆகியோரை கழக தலைமை நிலையச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான S.P. வேலுமணி,கழக தேர்தல் பிரிவுச் செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் பொள்ளாச்சி V. ஜெயராமன், கூடலூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன், கேரள மாநிலக் கழகச் செயலாளர் G. சோபகுமார், கோவை புறநகர் வடக்கு மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் A. நாசர் ஆகியோர் நேரில் சந்தித்து, அதிமுகவின் சார்பில் நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய்க்கான வரைவோலையை வழங்கினார்கள்..
Tags : வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச் சரிவு பலிகள்-அதிமுக 1 கோடிரூபாய் நிவாரணம்.



















