முன்னாள் முதலமைச்சர் சொத்துக்கள் முடக்கம்

by Staff / 05-04-2024 11:49:49am
முன்னாள் முதலமைச்சர் சொத்துக்கள் முடக்கம்

ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் ரூ.31 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹேமந்த் சோரன் மற்றும் நான்கு பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பதிவு தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில் இந்த சொத்துக்களுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஹேமந்த் சோரன் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories