மதுரை மத்திய சிறையில் மோதல் சம்பவம் - 21 கைதிகள் மீது வழக்கு.

by Editor / 30-12-2021 01:17:40pm
மதுரை மத்திய சிறையில் மோதல் சம்பவம் - 21 கைதிகள் மீது வழக்கு.

மதுரை மத்திய சிறையில் இரண்டு பிரிவினருக்கு இடையே சிறைக்கு வெளியே இருந்த முன்விரோதம் காரணமாக சுமார் இருபதுக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் மற்றும் தடுப்பு காவல் கைதிகளிடையே நேற்று மதியம் மோதல் ஏற்பட்டது.இந்த மோதலால் சிறைக்குள் இருந்த குடிநீர் தொட்டி, விளக்குகள், கூரைகள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியும், பிளேடால் தங்கள் உடலை கீறிக் கொண்டும், சாலைகளில் கற்களை வீசி எரிந்தும் ரகளையில் ஈடுபட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக 15 விசாரணை கைதிகள் மற்றும் 5 தடுப்பு காவல் கைதிகள் என மொத்தம் 21 கைதிகள் மீது கரிமேடு காவல் நிலையத்தில் சிறை சட்டத்தின் கீழ் 12 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via

More stories