அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியின்றி தேர்வு

சாரண, சாரணிய இயக்கத்தின் 16வது தேர்தல் நடைபெற்ற நிலையில், அதன் தமிழ்நாடு தலைவராக அமைச்சர் அன்பில் மகேஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் சாரண, சாரணியர் இயக்க தலைவராக பதவி வகித்துள்ளனர்.
தற்போது சாரண, சாரணிய இயக்க மாநில முதன்மை ஆணையராக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமாரும், இயக்க மாநில தலைவராக அமைச்சர் அன்பில் மகேஸும் போட்டியின்றி தேர்வு செய்யபட்டுள்ளனர். மேலும் சாரண சாரணிய இயக்கத்தின் துணைத்தலைவர்களாக 6 ஆண்களும், 6 பெண்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த முறை இந்த தேர்தலில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா போட்டியிட்டு 52 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
Tags :