ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம் உயர்த்தும் பணி

by Staff / 19-02-2023 02:20:53pm
ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம் உயர்த்தும் பணி

மதுரை மாவட்டம் திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் இரட்டை அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு விரைவில் ரயில் போக்குவரத்து துவங்கும் நிலையில் பிளாட்பாரங்களில் உயரங்கள் அதிகரிக்கும் பணிக்காக பழைய பிளாட்பாரங்கள் அகற்றும் பணி தொடங்கியது.மதுரை கன்னியாகுமரி ரயில்வே மார்க்கத்தில் திருமங்கலம் முக்கிய ரயில்வே ஸ்டேஷனாக இருந்து வருகிறது இந்த ஸ்டேஷனில் மதுரை செங்கோட்டை பாலக்காடு திருச்செந்தூர் நாகர்கோவில் கோவை நெல்லை ஈரோடு மதுரை புனலூர் உள்ளிட்ட பயணிகள் ரயில்கள் அனைத்தும் நின்று செல்கின்றன.இது தவிர சென்னைக்குச் செல்லும் முத்துநகர் மற்றும் கொல்லம் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி பெங்களூர் எக்ஸ்பிரஸ் நின்று செல்கின்றன மொத்தம் 24- பெட்டிகள் நிற்கும் அளவிற்கு அமர்ந்துள்ள தண்டவாளத்தினை தற்போது நீளம் மற்றும் உயரத்தினை அதிகரிக்கும் பணிகள் திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் என்று துவங்கியுள்ளன.

 

Tags :

Share via
Logo