மாணவியை கடத்திச் சென்ற, 17 வயது சிறுவன் போக்சேவில் கைது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் -3-ந்தேதி பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வில் கடைசி தேர்வை எழுதி முடித்து வெளியே வந்த 17 வயதுடைய ஒரு அரசு பள்ளி மாணவி வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக மாணவியின் உறவினர் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி மாயமான மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் மாணவியை பெரம்பலூர் மாவட்டம் ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் அந்த மாணவியை வெளியூருக்கு கடத்தி சென்று ஒரு வாரம் தங்கி விட்டு, பின்னர் தனது வீட்டிற்கு அழைத்து வந்து தங்கியிருந்தது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மாணவியை மீட்ட மகளிர் போலீசார், சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, கைது செய்து, அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். மாணவியை அவரது பெற்றோரிடம் அறிவுரை கூறிய ஒப்படைத்தனர்.
Tags :