பத்திரம் பதிவு செய்ய ரூ 1500 லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் மற்றும் பணியாளர்கைது.

by Editor / 05-07-2024 11:33:06pm
பத்திரம் பதிவு செய்ய ரூ 1500 லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் மற்றும் பணியாளர்கைது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பத்திரப்பதிவு செய்ய அலுவலக உதவியாளரிடம் 1500 ரூபாய் லஞ்சம் கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கையும் களவுமாக பிடித்த சார் பதிவாளர் மற்றும் தற்காலிக பணியாளர் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேலக்குடியிருப்பு திரௌபதி அம்மன் கோயில் பின்புறம் குமரன்நகரில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜெயங்கொண்டத்தில் போஸ்ட்மேனாக பணியாற்றும் கரடிகுளம் சோழியன் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன்  சாக்கரடீஸ்(54) என்பவருக்கு அவரது மகன் பெர்னாட்ஷா தனது பெயரில் உள்ள நிலத்தை தந்தை சாக்ரடீஸ்க்கு பத்திரப்பதிவு செய்ய கொடுத்துள்ளார். அப்பொழுது பத்திரப்பதிவு செய்ய லஞ்சமாக 1500 ரூபாய் சார் பதிவாளர் பிரகாஷ்  கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாரிடம் சாக்கரடீஸ் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் அறிவுரைப்படி சாக்ரடீஸ் 1500 ரூபாய் லஞ்சத்தை அலுவலக உதவியாளர் சிவசக்திவேலிடம் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹேமசித்ரா மற்றும் இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் தலைமையில் போலீசார் மறைந்து நின்று நேற்று பத்திரப்பதிவு அலுவலர் பிரகாஷ் மற்றும் அலுவலக தற்காலிக பணியாளர் சிவசக்திவேல் ஆகிய 2 பேரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். மேலும் சார்பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு துறைக்கு பல்வேறு புகார் வந்ததாகவும் கூறப்படுகிறது.இந்த சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : பத்திரம் பதிவு செய்ய ரூ 1500 லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் மற்றும் பணியாளர்கைது.

Share via