பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படு கொலை

by Admin / 05-07-2024 11:25:26pm
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படு கொலை

 சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியில் புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் அவருடைய வீட்டில் அருகே பேசிக் கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பித்துள்ளனர். படுகாயம் அடைந்த ஆம்ஸ்ட்ராங் கிரீம்ஸ் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிர் இழந்து உள்ளார். அவருடைய உடல் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உடல் கூராய்வு செய்யப்பட்டு நாளை அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்து தேடி வரு கின்றனர்.

 

 

Tags :

Share via