,உலக நன்மைக்காக நீங்கள் செய்யும் யாகத்தை செய்யுங்கள்

by Admin / 19-11-2022 02:06:49pm
,உலக நன்மைக்காக நீங்கள் செய்யும் யாகத்தை செய்யுங்கள்

தாடகையின் கடைசி முடிவை தம் அம்பால்  எழுதிய ராமனின் வீரத்தை விஸ்வாமித்ரர் வானளாவ புகழ்ந்தார்.சித்தாஸ்ரமத்தை மூவரும் அ டைந்தனர்.அங்கிருந்த முனிவரு்கள் எல்லோரும் ஒருங்குதிரண்டு அவர்களைவரவேற்றனர். விஸ்வாமித்ரர் அவரு்களை நோக்கி,முனிவர்களே! ராமன் ,கொடும் அரக்கி தாடகையை கொன்றுவிட்டான்.இனி, உங்கள்நியமநிஷ்டங்களை செய்வதோடு வேள்வியையும் எந்த குறுக்கீடுமின்றி நிறைவேற்றுங்கள் என்றார். இதைக்கேட்ட ,முனிவர்கள்,தாடகை இறந்து விட்டாலும் அவளுடைய  மகன்களான மாரீசனும் சுபாகுவும் இருக்கிறார்களே  ..அவர்கள் தன்  அன்னையை கொன்ற  கோவத்தையும்  எங்கள் மீது காட்டுவானே...என்று அச்சம்தொனிக்க பேசினார்கள்.அருகிலிருந்து முனிவர்களின் கருத்துக்களை கேட்டுக்கொண்டிருந்த  இராமன் ,உலக நன்மைக்காக நீங்கள் செய்யும் யாகத்தை செய்யுங்கள் .நாங்கள்  பக்கத்திலிருந்து அரக்கர்களால் எந்தவித தீங்கும்நிகழாதவாறு பார்த்துக்கொள்வோம் என்றான்.

வேள்விக்கு வேண்டிய அனைத்துப்பணிகளும் வெகு மும்முரமாக நடந்தன.அவ்யாகம் ஆறு நாட்கள் நடக்கும்.அந்த ஆறுநாட்கள் முனிவர்கள் கடும் மெளன விரதத்திலிருப்பர்.எந்த நேரத்திலும் யாகம் நடக்கும் இடத்தை தாக்கி அழிக்க முற்படலாம்.அதனால் ,ராமனும் லட்சுமணனும் மிகுந்த எச்சரிக்கையில் இருக்க வேண்டியது அவசியம் என்பதைஉணர்ந்து அதற்கான வியூகத்தி லிருந்தனர்..  வேள்வி  நிறைவுறும்  கடைசி  நாளில்  ஆகாயத்திலிருந்து ஒரு பெரும்
 கர்ஜனை .மலைகள் உருண்டு வருவது போல அரக்க குலத்தினர்.திபு திபுவென்று அரக்கர் கூட்டம் யாகசாலை முன்புவரலாயின.ராமன் தன் தம்பியிடம் சி முன்யோசனைகளைத்தெரிவித்து,மானவ அஸ்திரத்தை மாரீசன் மீது தொடுத்தான்.அவ்அம்பு அவனை வீழ்த்தி கடலில் தூக்கி வீசியது.பின் ஆக்னேய அஸ்திரத்தை ஏவி சுபாகுவை சுட்டெரித்து ..அடுத்தடுத்து ஒவ்வொரு அரக்கர்களையும் தம் கணையால் வீழ்த்தினர்.
 

Tags :

Share via