போட்டி போட்டுக்கொண்டு இளைஞர்கள் பைக் ரேஸ் இருசக்கர வாகனம் மோதியதில் 50 வயது பெண் சம்பவ இடத்திலே பலி

by Staff / 12-06-2022 01:45:06pm
போட்டி போட்டுக்கொண்டு இளைஞர்கள் பைக் ரேஸ் இருசக்கர வாகனம் மோதியதில் 50 வயது பெண் சம்பவ இடத்திலே பலி

சென்னையை அடுத்த வண்டலூர் அருகே வெளி வட்ட பாதையில் போட்டி போட்டுக்கொண்டு பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களின் பைக் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னையை அடுத்த வண்டலூர் அருகே போட்டி போட்டுக்கொண்டு இளைஞர்கள் பைக் ரேஸ் 3 இருசக்கர வாகனங்களில் 6 இளைஞர்கள் அதிவேக வாகனங்களை ஓட்டுவதால் நேர்ந்த விபத்து நவீன் என்ற இளைஞர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மோதியதில் 50 வயது மதிக்கத்தக்க பெண் உயிரிழப்பு.ரேஸிலில் ஈடுபட்ட இளைஞர்கள் நவின் பக்கவாட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் மீது மோதியதால்  தலையில் பலத்த காயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. இளைஞர் நவீன் பின்னால் அமர்ந்து சென்ற விஷ்வா என்ற இளைஞருக்கு கால் முறிந்தது விபத்து குறித்து குரோம்பேட்டை  போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories