இன்று தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் கனமழை
இன்று தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் கனமழை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி ,திண்டுக்கல் மதுரை, தூத்துக்குடி ,ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 7 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது .சென்னை உள்பட தமிழ்நாட்டின் சுமார் 27 மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் விழுப்புரம் செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தமிழகத்தின் பரவலாக மலை நீடிப்பதன் காரணமாக வருகின்ற நவம்பர் 10 ஆம் தேதி வரை கனமழைக்கான மஞ்சளை எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. கனமழை பெய்யும் சமயங்களில் இடி மின்னலும் பலத்த காற்றும் வீசப்படும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Tags :


















