தகதகக்கும் தங்கம் விலை- சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்தது. 

by Editor / 10-05-2025 11:17:34am
தகதகக்கும் தங்கம் விலை- சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்தது. 

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விலை அதிரடியாக குறைந்த நிலையில் தங்கம் ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது.

இதனையடுத்து, தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது. இதனிடையே, நேற்று தங்கம் விலை கிராமுக்கு 115 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 15-க்கும் சவரனுக்கு 920 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 120-க்கு விற்பனையானது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை   உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 45-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் 3-வது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும், பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags : தகதகக்கும் தங்கம் விலை- சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்தது. 

Share via