விபத்தில் இறந்தவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீட்டில்  பங்கு கேட்ட பாஜக.நிர்வாகிகள்.

by Staff / 05-10-2025 11:47:13am
விபத்தில் இறந்தவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீட்டில்  பங்கு கேட்ட பாஜக.நிர்வாகிகள்.

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில், கடந்த 2023-ம் ஆண்டு விபத்தில் உயிரிழந்த திருமூர்த்தி என்ற இளைஞரின் குடும்பத்திற்கு இழப்பீடு பெறுவதற்காக பாஜகவை சேர்ந்த கோகுல கண்ணன் மற்றும் சாமிநாதன் ஆகியோர் உதவி செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இழப்பீட்டு தொகையில் ஏற்கனவே ரூ.10 லட்சம் பெற்ற நிலையில், மீண்டும் கூடுதலாக ரூ.10 லட்சம் கேட்டு பாஜக தலைவர் அண்ணாமலையின் பெயரை சொல்லி அவர்கள் மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
 

 

Tags : விபத்தில் இறந்தவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீட்டில்  பங்கு கேட்ட பாஜக.நிர்வாகிகள்.

Share via