இபிஎஸ்-யை ஒருமையில் பேசிய ஆதவ் அர்ஜுனா

by Editor / 31-05-2025 02:57:32pm
இபிஎஸ்-யை ஒருமையில் பேசிய ஆதவ் அர்ஜுனா

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாமல்லபுரத்தில் நேற்று மே.30 தவெக தலைவர் விஜய் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழா ஏற்பாடுகளை பார்வையிட்ட ஆதவ் அர்ஜுனா புஸ்ஸி ஆனந்திடம், "பாஜகவே அதிமுகவை கூட்டணியில் இருந்து விலக்கிவிடும். எடப்பாடி பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணி வைக்க முன்வரவில்லை" என்று நக்கலாக ஒருமையில் பேசியுள்ளார். 
 

 

Tags :

Share via