மாநகராட்சி கூட்டத்தில் கைகலப்பு.. 3 கவுன்சிலர்கள் மீது வழக்குப்பதிவு

by Editor / 31-05-2025 03:51:47pm
மாநகராட்சி கூட்டத்தில் கைகலப்பு.. 3 கவுன்சிலர்கள் மீது வழக்குப்பதிவு


சேலம் மாநகராட்சி கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்ட நிலையில் திமுக, அதிமுக இரண்டு தரப்பைச் சேர்ந்த 3 கவுன்சிலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகராறு தொடர்பாக போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ,இரு தரப்பிலும் புகார்கள் அளிக்கப்பட்டன. தாக்குதல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், பெண்களிடம் இழிவாக நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via